Friday, December 24, 2010

பட்டா நிலத்தில் கோயில் மேற்கூரை அமைத்த கிறிஸ்தவ நிர்வாகிகளை தடுத்த காவல் துறையினர்

குமரி மாவட்டம் கொற்றிகோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட எரிச்சமா மூட்டு விளை என்னும் பகுதியில் குமரி மாவட்ட தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த C.S.I கிறிஸ்தவர்கள் சிறிய ஓலை கூரையிலான கோயில் கட்டி பல வழிபாடு நடத்தி வருகின்றனர். பின்னர் பெரிதாக கோயிலை கட்ட அனுமதி முயற்சித்த போது சிலரது தூண்டுதலால் அனுமதி மறுக்க பட்டது. 

ஏற்கனவே ஒரு பழைய கோயில் இருந்து அதை பெரிது படுத்த முயற்சித்த போது அதே பகுதியை சேர்ந்த சிலரால் பிரச்னை வந்திருக்கிறது. பின்னர் கொற்றிகோடு சபை நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர். கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாக நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று கோயிலின் மேற்கூரை கட்டும் பணியை தொடங்கியிருக்கிறார்கள் . அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் பிரச்னை செய்ததாக தெரிகிறது. பின்னர் காவல் துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு மேற்படி பிரச்னை ஏற்படாதவாறு காவல் காத்து கொண்டிருக்கின்றனர். 

இதனால் மேற்கூரை கட்டும் பணியும் தடைபட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மத கலவரத்தை அடுத்து அமைக்க பட்ட ஆய்வு கமிசன் பரிந்துரை படி புதிதாக எந்த ஆலயமும் மற்ற மத வழிபாட்டு இடங்களுக்கு அருகாமையில் அமைய கூடாது என்பதாகும். ஆனால் இந்த எரிச்சமா மூட்டு விளையில் அமைந்துள்ள கிறிஸ்தவ வழிபாட்டு இடம் மண்டைக்காடு கலவரத்திற்கு முன்பே வழிபாடு நடத்தி வந்ததாகும் அதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் தான் நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தும் சிலரால் திட்ட மிட்டு பிரச்னை ஏற்படுத்துவது என்பது ஏற்க தக்கதல்ல. 

 காவல்துறையினரும் , மாவட்ட நிர்வாகமும் அந்த பகுதி மக்களிடையே கலந்து பேசி ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி நீதிமன்ற உத்தரவை செயல் பட வைக்க வேண்டும் இதுவே பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது. கடந்த காலங்கள் போல் இல்லாமல் இப்போது அனைத்து மத மக்களும் சகோதரர்களாக பழகி வருகின்ற வேளையில் சில சமூக விரோதிகளால் தூண்டப்படும் இந்த மாதிரியான மத பிரச்சனைகளில் அரசு மிகவும் விழிப்பாக இருந்து மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் .         

6 comments:

Unknown said...

பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா .. நாம் பொறுமையின் சிகரம் இயேசு வின் பிள்ளைகள்...........நாம் இந்த பிரச்சனைகளுக்காக ஜெபிப்போம்........

ஜெறின் said...

இயேசுவின் பிள்ளை என்று அமைதி காப்பது தான் எல்லோருக்கும் சாதகமாக அமைகிறது.


மத பிரச்சனை இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நாம் நினைத்தால்,எந்த விதமான வன்முறையையும் கையாழலாம் என்பது தான் எனது கருத்து.

ஜெறின் said...

இப்போது அறிந்த நிலவரப்படி கொற்றிகோட்டில் உள்ள அனைவருமாக ஒருமித்து போராடி ஆலயத்தை கட்டி முடித்து விட்டனர்.

இது மதவாதிகளுக்கு பெருத்த அவமானம் என நான் கருதுகிறேன்.

Kotticode said...

மத பிரச்சனை இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நாம் நினைத்தால்,எந்த விதமான வன்முறையையும் கையாழலாம் என்பது தான் எனது கருத்து /////////////////////

கையாள வேண்டாம் என்று தானே சொல்ல வந்தீர்கள் . இப்போது எந்த பிரச்னையும் இல்லாமல் கட்டி முடிக்க பட்டது அது பற்றிய பதிவு இருக்கிறது. மதம் அமைதி மகிழ்ச்சி சந்தோசம், அன்பு , பாசம் இவைகள் தான் கொடுக்க வேண்டும் , மாறாக துக்கம், வன்முறை இவைகள் கொடுக்க கூடாது . ஒரு மதத்தினரின் நடவடிக்கையை பொறுத்து தான் அந்த மதத்தை பற்றி மக்கள் புரிந்து கொள்ளுகிறார்கள் . விட்டு கொடுப்பவர்கள் கேட்டு போவதில்லை. கேட்டு போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை. ஒரு வழி அடைக்கும் போது மறு வழி திறக்கும் . இப்போது எல்லாம் சுமூகமாக நல்ல வழி திறந்திருக்கிறது

Unknown said...

ஆம் நண்பா .................... மதத்தின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்த இட்ட சதி நமது மக்களின் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது .......

Anonymous said...

பாருங்களேன்..."ஒற்றுமைக்குள் வேற்றுமை காணமுடியாது என்பதற்கு நம்முடைய கொற்றிகோட்டு மக்கள் ஒரு முன்மாதிரி"..தீய சக்திகள் என்ன!..காவல் துறை என்ன! நம்மை எதிர்க்க எந்த சக்திகளுக்கும் இயலாத காரியம்..இப்போதாவது நம்மை எதிர்ப்பவர்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்.அப்படியும் நம்மை எதிர்ப்பவர்கள் தங்களை மாற்றாவிட்டால் கடவுளின் சாபம் அவர்களை சாரும்.!...பாசத்துடன் உங்களுக்காக நான்..கிசிங்கர் பால்ராஜ்,கொற்றிகோடு (குமரி மாவட்டம்) / சென்னை. தொடர்புக்கு :+91-9094651688

Post a Comment

Updates Via E-Mail