Sunday, January 2, 2011

கொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா


ஆண்டு தோறும் டிசம்பர் கடைசி நாளும் ஜனவரி முதல் நாளும் இயக்க ஆண்டு நிறைவு விழாவும் அடுத்த ஆண்டின் துவக்க விழாவும் கொண்டாடுவது வழக்கம் . அதே போல் இந்த ஆண்டும் மிக சிறப்பாக இந்த இரு விழாக்களும் நடந்தேறின. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இந்த இயக்கம் இளைஞர்களுக்கு விளையாட்டு , சமூக சேவைகள் செய்து வருகிறது. இடையிடையே பல்வேறு பிரச்சனைகள் போட்டி பொறாமைகள் சந்தித்த பின்னரும் மனம் தளராமல் இயக்க உறுப்பினர்களின் மன உறுதியோடு பன்னிரெண்டாவது ஆண்டை வெற்றிகரமாக நடத்தி பதிமூன்றாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.  


கபடி, கிரிக்கெட் , கைபந்து போன்ற விளையாட்டு வீரர்களை கொண்ட எமது இயக்கம் இந்த விளையாட்டு போட்டிகளை ஆண்டு விழாவின் போது மாவட்ட அளவிலான அணிகள் பங்கு பெறும் விளையாட்டு போட்டியாக நடத்தியது . இதில் கன்யா குமரி மாவட்டத்தில் பிரபலமான பல அணிகள் பங்குபெற்றது இன்னும் இந்த போட்டிக்கு மெருகூட்டியது. அது மட்டுமல்லாது ஒரு நபர் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகளான மாரத்தான் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல் , குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழோடு கூடிய கோப்பையும் பரிசு பொருட்களும் வழங்க பட்டன.     பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்த பட்டது . இதில் வீரர்கள் ஏறி ஏறி வழுக்கி வருவதும் மீண்டும் ஏற முயற்சிப்பதுமகாக பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பார்வையாளர்கள் மிகவும் உற்சாகத்தோடு வீரர்களை ஊக்குவித்தனர்.   எந்த ஒரு இயக்கமும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றிகரமாக நடத்த முடியாது. அதற்கு விதி விலக்கு அல்ல எமது இயக்கமும் . பொதுமக்களின் பேராதரவோடு பன்னிரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட்டது . 


நாளைய தலைமுறையும் விளையாட்டில் பங்குபெற வேண்டும் என சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்த பட்டது . இந்த போட்டிகளால் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதை காண முடிந்தது. சிறுவர்களுக்கான அதாவது பதினான்கு வயதிற்குட்டபட்ட சிறுவர்களுக்கான கபடி போட்டி காண வந்த அனைவரையும் ரசிக்க வைத்தது.   
என்னமா வழுக்கு மரம் ஏறுறாங்க 

இந்த இயக்கத்தில் விளையாட வந்து உடல் திறனை வளர்த்து கொண்ட பலர் இன்று இந்திய ராணுவத்திலும் தமிழ்நாடு காவல் துறையிலும் இணைந்துள்ளனர் என்பதை இந்த போதுகூட்ட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக வந்தவர்கள் வெகுவாக பாராட்டினர்.  இயக்கம் செய்து வருகிற சமூக சேவைகளையும் , இனி இயக்கம் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளையும் வந்திருந்த பெரியோர்களால் இளைஞர்களுக்கு செய்தியாக தெரிவிக்க பட்டது. போதுக்கூட்ட்டத்தின் இடையிடையே கலை நிகழ்ச்சிகள் நடத்த பட்டன . இறுதியில் இன்னின்சை கச்சேரி நடத்தி இனிதாக நிறைவுற்றது .  

13 comments:

Rajesh kumar said...

Congratulations for all kotticode lucky star active members
Regards
Rajesh kumar
Chennai

Unknown said...

vazhuku maram sumar 4 manineram nadaipetrathu

Suresh Kumar said...

பலருடன் நான் இந்த விழாவை குறித்து பேசியதில் தெரிந்து கொண்டது. நண்பர்கள் மிகவும் அருமையாக இந்த விழாவினை நடத்தியது. அது மட்டுமல்லாது அதிக அளவில் பொதுமக்களும் இந்த நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளனர்.

இந்த ஆண்டு பலர் அவர்களாக வந்து நன்கொடை அளித்த்திருக்கிரார்கள் . இது ஒரு நல்ல முன்னேற்றம் .

Unknown said...

நிச்சயமாக.... நான் நமது கிளப் உறுப்பினர்களை நினைத்து பெருமை படுகிறேன் ......... மிகவும் வியக்கத்தக்கவகையில் இந்த ஆண்டு விழா சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடைபெற்றது ... அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.......

Suresh Kumar said...

@shibi

இதே ஒற்றுமையும் மன உறுதியும் அடுத்த இளம் தலைமுறைகளிடமும் உருவாகக் வேண்டும் இது தான் இப்போது நம் முன் இருக்கின்ற மிக பெரிய சவால் .

Arun said...

Hi All Doing good................... Why you did not help study for poor people. And do some good things also. I like yours active.In Tamil nadu more poor peoples suddenly stopped their studies, Bcoz they dont have that much money.Now a days all education institutions business motive.

Kotticode said...

Thanks Rajesh kumar

Kotticode said...

Thanks shibi

Kotticode said...

Visit Gallery to see all photos.
http://gallery.kotticode.com

Kotticode said...

Arun said...
Hi All Doing good................... Why you did not help study for poor people. And do some good things also. I like yours active.In Tamil nadu more poor peoples suddenly stopped their studies, Bcoz they dont have that much money.Now a days all education institutions business motive//////////////


Thanks for your comment Arun. Yes we are trying do that also. Thanks for watching us

JR said...

Congratulation to all lucky star sports club members for your all effort, implementation and activities etc...

Wish u all to do more and grow every day...

And also I am suggesting u to do some activities (Sports , Extra Activities , Social Work, Entertainment etc...)often instead of doing only in occasions and also doing some activities like social services in our areas or outer areas frequently.
Once again i am wishing u all and congrats to all members.

KISINGER PAULRAJ said...

"Kotticode" -Games & Education persons growing Extradinory from this place situated in Kanyakumari District , Tamil Nadu state ..Specialy outstanding performance by the Team Members of all "Kotticode Lucky Stars Sports Club "..They are doing nice activities not only on occasions, incase of emergency situations also district level they are helping a lot.. for them special activities really remarkable....The Kotticode Lucky Star Sports Club Team will be Grow & grow..No doubt at all..congrats them all..Thanks once again..By Kisinger Paulraj, Kotticode (K.K.Dist) / Chennai.

Kotticode said...

Thanks kisinger.

Post a Comment

Updates Via E-Mail