Monday, January 24, 2011

இரண்டு கால்களும் இழந்த நிலையில் உதவி வேண்டி

கடந்த ஜூலை மாதம் கேரளாவிற்கு வாகனத்தில் மாற்று ஓட்டுனராக சென்று கொண்டிருந்த வேளையில் கோட்டயம் அருகே ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களையும் இழந்தார் சதீஷ் . இவர் குமரி மாவட்டம் கொற்றிகோடு பகுதியில் காலம் சென்ற நெல்சன் அவர்கள் மகன். 24 வயது நிரம்பிய இவர் மிகவும் சுறு சுறுப்பான செயல் பாடு உடையவர் . அந்த விபத்து நடந்த பின்னர் கோட்டையம் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் அதன் பேரில் தொடை பகுதியிலிருந்து இரண்டு கால்களும் எடுக்க பட்டது .

பின்னர் நாகர் கோவிலில் பிராங்கிளின் மருத்துவ மனையில் ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை எடுத்தார் . ஏழை குடும்பம் என்பதாலும் தந்தை இல்லாததாலும் மருத்துவ செலவுகளுக்கு மிக சிரம படுகிறார்கள். அண்ணன் தம்பிகளால் ஆறு லட்சத்திற்கு மேல் செலவு செய்து இப்போது ஹைட்ராலிக் முறையிலான கால சென்னையில் ஒரு மருத்துவ மனையிலிருந்து பொருத்த பட்டு இன்று காலை வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்.  

எப்படி தான் செயற்கை கால மாட்டினாலும் சொந்த கால் போல் வராது . இனி எந்த அளவிற்கு உழைத்து வாழ்வில் முன்னேற முடியும் என்பதே கேள்வி குறியாக உள்ளது . மருத்துவ மனையில் சென்று பார்த்த போது என்ன மனமுடைந்து போய் விட்டேன் . என்ன வார்த்தைகள் சொல்லி ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் இருந்தேன் . மறுமுறை சென்று பார்க்கவே முடியாத படி மனம் வலிக்கிறது . தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று வெளியில் காட்டாமல் இருக்கும் சதீஷ் மனதிற்குள் சிந்திக்காமல் இருக்க மாட்டார் . 

இந்த நிலையில் எதிர் காலத்தின் மீது ஒரு நம்பக தன்மையை மனிதாபிமான அடிப்படையில் உருவாக்க வேண்டியது நமது கடமை. எங்களோடு சேர்ந்து விளையாடிய நண்பனுக்கு எங்களால் இழந்த கால்களை கொடுக்க முடியாது ஆனால் அவன் துன்பத்தில் ஓரளவிற்கு பங்கேற்க முடியும் என நினைக்கிறோம் . இதன் அடிப்படையில் இயக்க உறுப்பினர்கள் ஒவ்வருவரும் தங்களால் இயன்ற பணத்தை தரலாம் என வாக்குறுதி தந்திருக்கிறார்கள் . நமது ஊரை சேர்ந்த பலர் இன்று வெளியூர்களில் நல்ல நிலையில் இருக்கிறீர்கள் நீங்களும் எங்களோடு சதீஷின் துன்பத்தில் பங்கெடுக்க விரும்பினால் உங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள் என கேட்டு கொள்கிறோம் .

இந்த பதிவை படிக்கும் மனிதாபிமான மிக்க நீங்கள் ஒவ்வருவரும் உதவ நினைத்தால் உங்கள் உதவிகளை தாராளமாக ஏற்று கொள்வோம் . இந்த பணம் வாழ்க்கை முழுவதும் பயன் பட வில்லைஎன்றாலும் மனம் ஒடிந்து இருக்கும் சதீஷ் க்கு ஒரு சிறிய ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . உங்கள் உதவிகளை எதிர்பார்த்து இருக்கிறோம் . உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்பதையும் இதே பதிவில் கருத்து பெட்டி வாயிலாக தெரிவித்தால் மற்றவர்களும் தெரிந்து மேலும் உதவிகள் செய்ய வாய்ப்பாக இருக்கும் . அப்படி தெரிவிக்க வேண்டாம் என நினைப்பவர்கள் admin@kotticode.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் . எவ்வளவு பணத்தொகை பிரிக்க படுகிறதோ அந்த விபரங்களும் சதீஷிடம் அந்த பணத்தை ஒப்படைக்கும் விபரங்களும் சரியான நேரத்தில் தெரிவிக்க படும் . 

உதவி செய்பவர்கள் தொடர்புக்கு 

admin@kotticode.com
R.Jenifer 
Club treasurer Kotticode Lucky Star Sports club
Mobile No. +919629949445

9 comments:

Unknown said...

கட்டாயம் செய்ய வேண்டியது நான் என்னால் முடிந்ததை ஜெனிபிரிடம் குடுத்து விடுகிறேன் .

Suresh Kumar said...

நன்றி சாம் ///////


இப்போது எழில் சிங்கை தொடர்பு கொண்டேன். எழில் சிங் ஆயிரம் ருபாய் இந்த வாரத்தில் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார் .

Anonymous said...

nalla muyarchi

Unknown said...

நிச்சயமாக என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்

ஜெறின் said...

இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்...என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்...

Anonymous said...

Do you have any bank account? If so, please post it..So that people can transfer amount to that account...I will transfer

Kotticode said...

@Anonymous //////

A/C.No. 67130806355
NAME : KOTTICODE LUCKY STAR SPORTS CLUB
BANK : STATE BANK OF TRAVANCORE
BRANCH NAME : MUTTA KADU ,KUMARA PURAM POST
BRANCH CODE : 0488
ADDRESS : KOTTICODE,
KUMARA PURAM POST
KANYA KUMARI DISTRICT .
PIN- 629189. ///////////

http://www.kotticode.com/p/donate-us.html

Please mention Ref: Sathish

Thanks for your intrest

Anonymous said...

===================================================
From ICICI Bank Account:
To Payee KOTTICODE LUCKY STARSPORTSCLUB
STATE BANK OF TRAVANCORE
SAVINGS ACCOUNT 67130806355
KALKULAM, KALKULAM
Transaction Amount (Rs.) 2000.00
Transaction Remarks Sathish
=====================================================
Thanks for sharing the account details

Regards,
A.R.Sambath
Pearl city.

Kotticode said...

We received your money. We will update soon. Thanks for ur helping

Post a Comment

Updates Via E-Mail